Pages

Nov 21, 2011

நாளைக்குள் மக்கள் நலபணியாளர்களைபணியில் சேர்க்க வேண்டும் :சென்னை உயர்நீதிமன்றம்

மக்கள் நல பணியாளர்களை நாளைக்குள் பணியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊழியர்களை பணியில் சேர்ந்ததை வரும் புதன் கிழமைக்குள் உறுதி படுத்தி அறிக்கை தரவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி சுகுணா உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடரப்பட்ட 15 பேரை மட்டும் பணியில் சேர்த்தால் போதாது என்றும் பணிநீக்கம் செய்த ஆயிரகணக்கானோரையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மக்கள் நலபணியாளர்களின் வழக்கு மீதான இறுதிகட்ட விசாரணை வியாழன் அன்று நடைப்பெறும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!