Pages

Nov 25, 2011

ஆபாசமாகப் பேசிய வழக்கில் நடிகர்கள் சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ் சம்மன்!

2009 ஆம் ஆண்டு திரைப்பட நடிகையொருவர் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டபோது, நாளிதழ் ஒன்று 'தனக்கேயுரிய' வகையில் செய்தி வெளியிட்டிருந்தது. இது மற்ற நடிகர் நடிகைகளை ஆத்திரங் கொள்ளச் செய்தது. அச்செய்தி பற்றி நடிகர்கள் காவல்துறையில் முறையிட்டதால்,
காவல்துறை நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின் என்பவரைப் பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து இழுத்துச் சென்றது. இதைத் தொடர்ந்து நடிகர்கள் கூடி நடிகர் சங்கத்தில் கண்டனக் கூட்டம் போட்டனர். அதில் பேசிய நடிகர்கள் செய்தியாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் பேசினர். நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் நடிகர்கள் விவேக், சூரியா, சத்யராஜ், ஸ்ரீபிரியா, விஜயகுமார், சரத்குமார் ஆகியோர் ஆபாசமாகப் பேசியதால் செய்தியாளர்கள் சார்பில் பல ஊர்களின் நீதிமன்றங்களிலும் வழக்குகள்ப் பதிவுச் செய்யப்பட்டன.
அதில் ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவிட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் தரப்பு வழக்குரைஞர் விஜயன் கோரியபடி, நீதிபதி சுப்ரமணியம், "இவ்வழக்கு முகாந்திரம் உடையது என்று கூறி நடிகர்கள்  சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர்  அனைவரும் டிசம்பர் 19ம் தேதி நேரில் நீதிமன்றம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!