Pages

Dec 1, 2011

நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; கார் மோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு


சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை புவனேஸ்வரி மீது மோசடி புகார் மனு கொடுத்து இருந்தார்.   ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தனது சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்து புவனேஸ்வரி பயன்படுத்தி வந்ததாகவும், முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக அதில் கூறியிருந்தார்.

காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.   இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நடிகை புவனேஸ்வரியை விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் நேரில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.  

நடிகை புவனேஸ்வரி மீது மடிப்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் மோசடி புகார்கள் உள்ளன. எனவே அதுபற்றியும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!