Pages

Dec 6, 2011

தமிழக - கேரள எல்லையில் பதற்றம் : போலீசார் குவிப்பு!


முல்லைப் பெரியாறு அணை பிரச்னை காரணமாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தமிழக - கேரள எல்லையில் பதற்றமான நிலை 
காணப்படுகிறது. தமிழக – கேரள எல்லையில் பதற்றம் நிலவுவதால் கம்பம் பகுதியில் 5 எஸ்.பி.க்கள் தலைமையில் 600 போலீசார், கூடுதலாகக் 
குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாய் கண்காணிக்க, வட்டார நிர்வாக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் தேனி மாவட்ட எல்லையான கம்பம் மெட்டு,போடி மெட்டு,குமுளி மெட்டு ஆகிய 3 சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 
பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கம்பம், உத்தமபாளையம், பகுதிகளில் போராட்டம் நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மதுக்கடைகள் 
அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழக எல்லையோரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அதனால், கடைகள், சிறுவணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருப்பதுடன், போக்குவரத்தும் படிப்படியாக சீரடைந்து வருகிறது.  கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றி 
சென்ற லாரிகள், டெம்போ வேன்கள் மற்றும் பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இரு சக்கர வாகனங்கள், ஐயப்ப பக்தர்கள் செல்லும் பேருந்துகள், வேன்கள் தடுக்கப்பட்டன. 

இதனிடையே கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமலும் தடுத்தனர். இதனால் அங்கே பதற்றமான சூழல் 
ஏற்பட்டது.போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதேபோல் கேரள மாநிலத்தவர் தமிழக வாகனங்களை நுழைய விடாமல் தடுத்துள்ளனர். 
இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!