Pages

Dec 24, 2011

"அதில் " வித்யா பாலனை மிஞ்சுவேன் மாடல் அழகி சுரபி பிரபு சவால்!

மாடல் அழகியும், நடிகையுமான சுரபி பிரபு. பிரபல மாடல் அழகியும், ‘இலா அய்தே இலா’ என்ற தெலுங்கு பட ஹீரோயினுமான சுரபி பிரபு கூறியதாவது:நடிகையாக வேண்டும் என்பது என் கனவு. பட்டப்படிப்பு முடித்தவுடன் மாடல் அழகியானேன். பின்னர் மேடை நாடகங்களில் நடித்தேன். நடிகையாக வேண்டும் என்ற கனவு பலித்தது. மும்பை நடிகைகளுக்கு அதிகம் கைகொடுத்திருப்பது தென்னிந்திய படங்கள்தான். என்னுடைய அறிமுகமும் தென்னிந்திய படங்களில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘இல அய்தே இலா’ படத்துக்காக டைரக்டர் பி.சந்திரசேகர் ரெட்டி ஹீரோயின் தேடுவதாக அறிந்தேன். அவரை தொடர்பு கொண்டேன். நான் அதிர்ஷ்டக்காரி. எனக்கு உடனே வாய்ப்பு கிடைத்தது. நல்ல கேரக்டர். ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்தது. அதுபற்றி கவலைப்படாமல் நடித்தேன்.  ‘தி டர்டி பிக்சர்’ படத்தில் வித்யாபாலன் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து ஒரே படத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். அவரைவிட என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும். நடிப்பும், கவர்ச்சியும் இருந்தால் எந்த  நடிகையும் நெம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும். நானும் அதற்கு முயற்சிப்பேன்.

No comments:

Post a Comment

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!