Pages

Dec 22, 2011

மதுரையை பற்றி "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது

 "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு, இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த மதுரை சு.வெங்கடேசன் எழுதிய, "காவல் கோட்டம்' என்ற நாவலுக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வெங்கடேசன் குறிப்பிடுகையில், "மதுரையில் 1920ம் ஆண்டு வரை இருந்த பாதுகாப்பு முறையை அடிப்படையாக வைத்து, இந்த நாவலை எழுதினேன். பொதுவாக இந்த விருது, வயதான எழுத்தாளர்களுக்குத் தான் வழங்கப்படுவது வழக்கம். இளம் வயதில் இந்த விருதைப் பெறும் எழுத்தாளன் என்ற முறையில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, டில்லியில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது, ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும், தாமிர பட்டயமும், சால்வையும் அடங்கியது.

7 comments:

  1. சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மனம் மகிழ வாழ்த்துகிறேன்...!!!

    ReplyDelete
  3. மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சாகித்ய அகாடமி விருது பெறும் சு. வெங்கடேசன் அவர்களுக்கு என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  5. காவல்கோட்டம் எழுதிய சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள். மதுரையின் வரலாறை மையமாகக் கொண்டு இதுபோல் பலநாவல்கள் வரட்டும். ஒரு லட்ச ரூபாய் பரிசு எனும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகாலம் ஆய்வு செய்து எழுதியிருப்பார். கிரிக்கெட்க்காரனுகளுக்கெல்லாம் கோடி, கோடியாக கொட்டி கொடுக்கும் அரசு, எழுத்தாளனுக்கு ஒரு லட்சம் கொடுப்பது அநியாயம். இனியாவது பரிசுத்தொகையை உயர்த்த வேண்டும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  6. ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது, எனது அனுபவத்தை அவ்வப்போது எழுதியது. முடிந்தால் நபது பக்கத்திற்க்கு வருங்கள் பிளிஸ்http://nirmalcb.blogspot.com/2012/04/7.html

    ReplyDelete

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!