
ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு
அதிகரித்துள்ளன. அதாவது, இந்த நிறுவனங்கள் ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய்
என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுக்க ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய\
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட,
இப்போதே செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன.
மேலும் அதிகரித்து வரும் செலவால் செல்போன் நிறுவனங்களின் நிகர லாபம்
தொடர்ந்து குறைந்து வருவதும் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகஇருக்கிறது.
குறிப்பாக, செல்போன் சேவையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் பார்தி
ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபகம் கடந்த மூன்றாண்டுகளாக வீழ்ச்சிக்
கண்டுள்ளது.
No comments:
Post a Comment
படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!