Jan 21, 2012

அறிஞர் அண்ணா: ஒரு சிறப்புப் பார்வை


தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிப் புகழ்பாடாத அரசியல் இயக்கங்களோ தனிமனிதர்களோ இருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயின. 

கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.

அதுபோன்றே " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,மறப்போம் மன்னிப்போம்,கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு,

இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும்,பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.

புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். வாசிக்கும் திறந்தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும்என்பார் அண்ணா.பழைய மூர் மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கில புத்தகங்களையும் வாங்கிவிடுவார்.

ஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசூர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும்,அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம்.

ஓர் இரவு திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (360 பக்கங்கள் கொண்டது) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார். எந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாகத்தான் வருவார்.

முன்னால் வந்தால் அடுத்தவரை பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள்,அதனால் ஊறுக்கு வெளியில் நின்று அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன் என்பார்.

இத்தாலிக்கு சென்ற அண்ணா போப்பாண்டவரை சந்தித்து, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் "மோகன் ரானடோவை" விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அண்ணாவின் கோரிக்கையை ஏற்று மோகன் ரானா விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவிற்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால் அண்ணா இறந்துபோயிருந்தார்.

வாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன இறப்பிலும் ஒரு சாதனையை படைத்துவிட்டார். ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம்.
 தமிழகமே கண்ணீர் விட்டு அழுதது. ஏடுகள் தலையங்கங்கள் தீட்டின. கவிஞர்கள் இரங்கல் கவிதைகளை இயற்றினர். எல்லாவற்றிலும் ஏக்கமே தெரிந்தது. இதோ ஒரு கவிதையைப் பாருங்கள்.

மேகம் கருகருத்து
மின்னல் எழக்கண்டே
தாகம் தணியமழை
சாய்க்கும் என்று காத்திருந்தேன்
நெஞ்சம் வறண்டதுவே,
தென்மேகம் தீய்ந்ததுவே!

------ சாலை இளந்திரையன் 

1806 ம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 ம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்கு கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான " கின்னஸ் ".

" வங்க கடலோரம் துயில் கொள்கிறான் அந்த தங்கத் தமிழன் அறிஞர் அண்ணா 

8 comments:

Kumaran said...

அறிஞர் அண்ணா - பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் நிறையே தெரிந்துக்கொண்டேன்..இன்னும் நிறைய எழுதுங்கள்.நன்றி.

அனுஷ்யா said...

இந்த புதுகாந்தி என்று சொல்லிகொல்பவரை நான் ஹசாரே என்று மட்டுமே சொல்வேன்,
ஏனெனில் அண்ணா என்பது இவரை மட்டுமே குறிக்கும்...
என் மனதிற்கு நெருக்கமான பதிவு...நெகிழ்ச்சி அதிகம்..
வாழ்த்துக்கள்...

ஒரு சின்ன வேண்டுகோள்:
வைகோ, அண்ணா போன்றோரை பற்றி நற்தகவல்கள் வெளியிடும் தங்கள் தளத்தில் இந்த ஸ்ரேயா வகையறா வேண்டாமே..ஏனோ நெருடியது...
தவறெனில் மன்னிக்கவும் நண்பரே...

Unknown said...

”மணியோ பத்தரை
மக்கள் எல்லாம் நித்திரை
நீங்கள் உதய சூரியன் சின்னத்தில்
அளிக்க வேண்டும் முத்திரை”

இந்த பேச்சுக்காகவே உதயசூரியன் வென்றது....

Unknown said...

புற்று நோய் வந்த போது....
தலைவனை மருத்துவர்கள்
குளிர் பதன அறையில் இருக்க
வேண்டும் என்று கூறினார்கள்....
எனக்கு அவ்வளவு வசதியில்லை
என்று கூறிய முதலைமைச்சர்...
அண்ணா.......

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது
பகிர்வுக்கு நன்றி
தொடரவாழ்த்துக்கள்

MaduraiGovindaraj said...

மயிலன் said...

ஒரு சின்ன வேண்டுகோள்:
வைகோ, அண்ணா போன்றோரை பற்றி நற்தகவல்கள் வெளியிடும் தங்கள் தளத்தில் இந்த ஸ்ரேயா வகையறா வேண்டாமே..ஏனோ நெருடியது...
தவறெனில் மன்னிக்கவும் நண்பரே...
இனிமேல் இந்தமாதிரி நடக்காது
நீக்கப்ட்டுவிட்டது
சுட்டிகட்டியதுக்கு நன்றி

MaduraiGovindaraj said...

Kumaran said...
அறிஞர் அண்ணா - பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் நிறையே தெரிந்துக்கொண்டேன்..இன்னும் நிறைய எழுதுங்கள்.நன்றி.

தங்கள் வருகைக்கு நன்றி

MaduraiGovindaraj said...

veedu said...
”மணியோ பத்தரை
மக்கள் எல்லாம் நித்திரை
நீங்கள் உதய சூரியன் சின்னத்தில்
அளிக்க வேண்டும் முத்திரை”

இந்த பேச்சுக்காகவே உதயசூரியன் வென்றது....

அண்ணா வின் கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்படும்