உணவே மருந்து உங்கள் உடல் நிலையை பாதுகாக்க நல்ல உணவை நேரத்தோடு அளவாக சாப்பிடுங்கள்
பல சமயங்களில் நாம் என்ன உண்ணுகிறோம் என்பதை உணராமலேகூட உண்ணுகிறோம். பொதுவாகவே நாம் சாப்பிடும்போது, பேசுவது, நடப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மற்ற நடவடிக்கைகளில் ஈடு படுகின்றோமே தவிர, உண்ணும் உணவில் கவனம் செலுத்துவதில்லை. நாம் உண்ணும் உணவிற்கு சிறிய அளவே மதிப்பு கொடுக்கிறோம். பிறகு கொழுப்பு சக்தி அதிகமாக சேருவதில் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்.
சைவ உணவு என்றால் அதிகமாக உண்ணலாம் என்பது மக்களுடைய எண்ணமாக இருக்கிறது. இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சைவ உணவாகவே இருந்தாலும் தேவைக்கு அதிகமாக உண்ணுதல் என்பது தவறு.தேவைக்கு அதிகமாக உண்ணுதல் என்பது நோய்.சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி, தேவைக்கு அதிகமாக உண்ணுவது உடலில் அதிக பிரச்சினைகளை உருவாக்கும். தேவைக்கு ஏற்ப உண்ணுவது என்பதை நாம் இன்னும் கற்றுக் கொள்ளவேவில்லை.
நாம் உண்ணும்போது, நமக்கு என்ன தேவை, எவ்வளவு தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உண்ணுவது என்பது பேராசையால் விளைவது. அதிகமாக உண்ணுவது என்பதை நம்மால் அடைய முடியாத தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கான ஒரு மாற்றுவழியாகப் பயன்படுத்துகிறோம்.சைவ உணவே ஆன்மீக பயிற்சியில் ஈடுபடும் மக்களுக்கு சிறந்த உணவு. அது சுலபமாக ஜீரணிக்கப்பட்டு நல்ல சக்தியை உடலில் சேர்க்கிறது. மற்றும் மென்மையான சக்தி ஓட்டத்தை உருவாக்கி உடலில் உள்ள சக்ரங்கள் மற்றும் சக்தி மையங்களை இணைக்க உதவுகிறது.
புத்தரின் கருணையாலேயே அதிக அளவில் சைவ உணவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தோமானால் சைவ உணவே சாத்வீக உணவாக உணவறையில் ஆள்கிறது. சாத்வீக சைவ உணவு உண்ணும் மக்கள் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தவிர்க்கிறார்கள். இந்த மூன்று பொருட்களிலும் (Steroid) உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் உள்ளது. அவற்றுள் இருக்கும் சில நல்ல மருத்துவ குணத்திற்காக அவ்வப்பொழுது உட்கொள்ளலாம். தொடர்ச்சியாக இவற்றை உட்கொள்வதால் சக்ரங்களுக்குச் செல்லும் சக்தி ஓட்டத்தை குறுக்கீடு செய்கிறது. அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதும் ஒரே விளைவையே ஏற்படுத்துகிறது. தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும்போது, நாம் நமது உடலை ஒரு குப்பைத் தொட்டி போன்று பார்க்கின்றோம். தேவையற்றப் பொருட்களைச் சேர்க்கும்போது அதனை செறிமானம் செய்வதற்கே உடம்பிலுள்ள நல்ல வேதிப்பொருட்கள் விரயப்படுத்தப்படுகிறது. உணவை உடலுக்குள்ளே செலுத்தி வீணாக்குவதை விட உணவை வெளியே விரயமாக்குவது அதனினும் சிறந்தது. ஆகையால் உணவுபரிமாரும்போது சிறுது சிறுது தாகத்தான் பரிமாற்ற வேண்டும்
நாம் தட்டிலுள்ள உணவை மறுக்கும் போது தட்டிலுள்ள உணவை வெளியே மீந்து விடுகிறது. மிகையான உணவை மட்டுமே வீணடிக்கிறோம். அது மற்றவர்களுக்கு உண்ண கொடுத்து விடலாம்.ஆனால் உணவை உடலில் திணிக்கும்போது அது உடலுக்கு இரட்டை தீமையை விளைவிக்கின்றோம். அப்படி திணிக்கும்போது அது உடலுக்கு தேவையற்றதாகி விடுகிறது. மற்றும் அந்த உணவினால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. அதை செரிமானம் செய்வதில் நம் உடல் சக்தி (சோர்ந்து விடுகிறது) அளவுக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும்போது, உணவு விரயமாகிறது. மேலும் விஷமாகவும் உருவாகிறது.தேவைக்கு அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, மறுப்பதே சிறந்தது. என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் உணவிற்கு மதிப்பு கொடுக்கும் போது உங்கள் உடலும் அதற்கு இணையாக உங்களுக்கு மதிப்பளிக்கும்.
6 comments:
ரொம்ப நாள் கழித்து உங்களின் தளத்திற்கு வருகிறேன்.
"உணவே மருந்து" என்று அருமையா சொல்லியிருங்கீங்க ... நன்றி சார் !
Email Subscription செய்துள்ளேன். ஆனால் பதிவு என் மெயிலில் இதுவரை வந்ததில்லை... சரி பார்க்கவும் ... நன்றி !
சைவ உணவே சாத்வீக உணவாக உணவறையில் ஆள்கிறது.
சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் உணவிற்கு மதிப்பு கொடுக்கும் போது உங்கள் உடலும் அதற்கு இணையாக உங்களுக்கு மதிப்பளிக்கும்//
மிகச் சரியான கருத்து
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
நண்பரே மிக நல்ல பதிவு இது.
Good
Post a Comment