


மதுரையில் பிப்ரவரி மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில்
கொண்டாடப்படவுள்ள மாமதுரை போற்றுவோம் விழாவிற்கான முப்பரிமாண காட்சி
விளம்பரங்களை கலெக்டர்அன்சுல்மிஸ்ரா தலைமையில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா
மற்றும் விழாக்குழுவினர் நேற்று திறந்து வைத்தனர். மதுரையில் பிப்ரவரி
மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ள மாமதுரை
போற்றுவோம் விழா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும்
வகையில் மதுரை மாநகரின் அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான
விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம்
எதிரிலுள்ள மேலவாசல்கோட்டை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள முப்பரிமாண
காட்சி விளம்பரங்களை கலெக்டர்அன்சுல்மிஸ்ரா, மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா
மற்றும் விழாக்குழுவினர்நேற்று திறந்து வைத்து பார்வையிட்டனர்..
அதனடிப்படையில் விளக்குத்தூண் பழந்தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல்
என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின்
திமிலைப்பிடித்து வீரன் ஒருவன் அடக்கும் காட்சி சிலையாக
வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்காநத்தம் ரவுண்டானாவைச்சுற்றி பழந்தமிழரின்
வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து
வெளிக்கிளம்பும் யானையின் சிற்பக்காட்சியும், மதுரை பெரியார் பேருந்து
நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டையின் மேல் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட
கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும்
உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முப்பரிமாண விளம்பரக்காட்சிகளை சென்னையைச்
சேர்ந்த கலை இயக்குநர் நாகு தலைமையில் 40 கலைஞர்கள் சேர்ந்து இருவாரங்களாக
பணியாற்றி உருவாக்கியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால், மாமதுரை
போற்றுவோம் விழாக்குழுவின் தலைவரும், மீனாட்சி சுந்தரேஷ்வரர்
திருக்கோயிலின் தக்காருமான கருமுத்துகண்ணன், மதுரை மாநகராட்சி துணை ஆணையர்
சாம்பவி, விழாக்குழுவின் துணைத்தலைவர்கள் கே.எஸ்.பரத், சு.வெங்கடேஷன்,
உதவி ஆணையர் தேவதாஸ், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ்,தேசிய
தகவல் மைய அலுவலர் திரு.மைக்கேல் உள்ளிட்ட அலுவலர்கள், பள்ளி மாணவர்கள்,
பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2 comments:
அருமையான பதிவு.
நன்றி.
நல்ல பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment