சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், பிரபாகரன் மகன் கொலைக்கு முதல்வர் ஜெய லலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அந்த 12 வயது குழந்தை எந்த குற்றமும் புரியவில்லை.
பிரபாகரன் மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அவனை சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளிவந் துள்ளன.
ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கூறினார்.
1 comment:
இப்போதான் இலங்கையில் இந்த கொடுமையெல்லாம் நடக்கிறது தெரியுமா!!!
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment