Jun 21, 2019

பிரின்ஸ் ஆப் பெர்சியா Prince of Persia: The Sands of Time

                                            2010 ஆண்டு வெளியான திரைப்படம் இது.. கதையோட ஹீரோ டஸ்டன் ஒரு அனாதை.. அவரோட திறமையைப் பார்த்து வியந்த பெர்சியா நாட்டோட அரசர்.. சின்ன வயசான டஸ்டனை தத்து எடுத்து வளர்க்கிறார்.. அரசருக்கு டஸ், கர்சிவ்ன்னு ரெண்டு பசங்களும் இருக்காங்க.. டஸ், கர்சிவ்வோட சித்தப்பா நிஜாம்.. டஸ்டனைத் தவிர இவங்க எல்லாம் அரச குடும்பத்தாருங்க..பெர்சியாவோட எதிரிகளுக்கு புனித நகரமான "அலமட்" ஆயுதங்கள்
விற்பனை செய்றதா தெரிய வருது.. நிஜாமுக்கு இது தெரிய வந்து அந்த நகரம் மேல படை எடுக்க வைக்கறாரு.. டஸ்டனோட திறமையால போர்ல ஜெயிச்சி அந்த நகரத்தோட அரசி டமினாவை சிறைபிடிக்கறாங்க பெர்சியா குரூப்.. அந்த சண்டையில ஒரு எதிரியைக் கொல்றப்போ ஒரு வித்தியாசமான குத்துவாள் டஸ்டனுக்கு கிடைக்குது.. 

அந்த வெற்றியைக் கொண்டாடும் போது.. அரசருக்கு ஒரு சிறப்பு ஆடையை பரிசாக கொடுக்க சொல்லி டஸ்டன்கிட்ட இளவரசர் டஸ் ஒரு ஆடையைக் கொடுக்கறார்.. ஏதுமறியாத டஸ்டன் அதேமாதிரியே செய்ய.. விசம் கலந்த அந்த ஆடையை உடுத்தியதால அரசர் இறந்திடறார்.. டஸ்டன்தான் அரசரைக் கொன்னதுன்னு எல்லாரும் அவரைத் துறத்த டமினா.. டஸ்டனைத் தப்பிக்க வைக்கறாங்க.. ஆனால் அவங்க தப்பிக்க வைச்சதே டஸ்டன்கிட்ட இருந்து அந்த குத்துவாளைப் அபகரிக்கற நோக்கத்துலதான்..
ஒரு இடத்துல டமினா டஸ்டனைக் கொல்லப் பார்க்கறப்போ அந்த குத்துவாள் இறந்துகாலத்துக்கு போற சக்தியுடையதுன்னு டஸ்டனுக்குத் தெரிய வருது.. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து அரசரோட இறுதி சடங்குல யாருக்கும் தெரியாம கலந்துக்கறாங்க.. அப்போ நடக்கற நிகழ்ச்சிகள் மூலமா அரசர் சாகக் காரணம் டஸ் இல்ல அவரோட சித்தப்பா நிஜாம்தான்னு தெரிய வருது.. அது ஏன்னா.. ஒரு பிளாஷ் பேக்..

சின்ன வயசுல நிஜாமும் அரசரும் வேட்டைக்குப் போயிருக்கப்போ ஒரு சிங்கத்துகிட்ட இருந்து அரசரை நிஜாம் காப்பாத்தியிருப்பாரு.. அந்தமாதிரி நடக்காம இருந்தா நிஜாம்தான் மன்னர் ஆயிருப்பாரு.. அந்த இறந்தகாலத்தை மாற்றியமைக்கத்தான் நிஜாம் புனிதநகரத்து மேல போர் தொடுக்க வைச்சிருக்காருன்னு புரிஞ்சுக்கறார் டஸ்டன்.. அதுக்கப்புறம் அரசரைக் கொன்னது நிஜாம்ன்னும் தான் நிரபாராதின்னும் நிரூபிக்க டஸ்டன் நிறைய போராடுறார்..

நிஜாமுக்கு இறந்தகாலத்துக்குப் போறதுக்கு டஸ்டன் கையில இருக்கற குத்துவாளும்.. அந்தக் குத்துவாளைப் பயன்படுத்தி இறந்தகாலத்துக்கு அழைச்சிட்டு போற சாண்ட்கிளாசும் தேவை.. அந்த சாண்ட்கிளாஸ் இரகசியமா பாதுகாக்கப்பட்டிருக்கு.. ஒருவேளை சாண்ட்கிளாஸ் உடைக்கப்பட்டா உலகம் அழிஞ்சிடும்னு டமினா சொல்றாங்க.. 

இந்தப் போராட்டங்கள்ல டஸ்டன் கையில இருக்கற குத்துவாள் நிஜாம் கைக்குப் போயிடுது.. சாண்ட் கிளாஸ் இருக்கற இடமும் தெரிஞ்டுது.. அவரைத் தடுக்கற முயற்சியில இளவரசி டமினா தன்னோட உயிரை தியாகம் பண்ணிடறாங்க.. டஸ்டனும் நிஜாமைத் தடுத்து அவரோட திட்டத்தை முறியடிச்சிடறார்.. அந்த சண்டையில சாண்ட் கிளாஸை நிஜாம் குத்தினதுல டஸ்டன் திரும்பவும் புனித நகரத்தை தோற்கடிச்சப்போ அந்தக் குத்துவாள் கிடைச்ச நேரத்துக்கு திரும்பவும் போயிடறார்.. டஸ்டனுக்கு இனி நடக்கப்போறது தெரியும்.. அதைத் தடுக்கறதுக்காக வெற்றிக் களிப்பில இருக்கற வீரர்கள் நடுவுல போய் நிஜாம் பத்தி சொல்றார்.. இதைப் பார்த்துக்கிட்டு இருக்கற டஸ் இந்த விசயம் உண்மையான்னு விசாரிப்போம்னு சொல்றார்.. விசாரணை நடந்தா கண்டிப்பா மாட்டிப்போனு தெரிஞ்சுக்கற நிஜாம்.. டஸ்டனைக் கொல்ல முயற்சிக்கறார்.. அந்த சண்டையில நிஜாமை இளவரசர் டஸ் கொன்னுடறார்.. 

அப்புறம் டமினாகிட்ட தப்பு நடந்துடுச்சு மன்னிச்சுக்கங்கன்னு மன்னிப்பு கேக்கறாங்க பெர்சியா குரூப்.. அதுக்கு பரிகாரமா டஸ்டனை கல்யாணம் பண்ணிக்கனும்னு டமினாகிட்ட வேண்டுகோள் வைக்கறாங்க.. குத்துவாளை டமினாகிட்ட திருப்பிக் கொடுக்கறார் டஸ்டன்.. படம் முடிஞ்சது..சின்ன வயசு டஸ்டன் மார்கெட்ல பண்ற சாகசம் நல்லா இருக்கும்.. அப்புறம் புனித "அலமட்"  நகரத்து மேல போர் தொடுக்கறப்போ டஸ்டன் செய்ற சாகசங்கள் அற்புதம்.. முதல்ல ஹீரோ இந்த கெட்டப்புக்கு ஒத்து வரலையேன்னு தோனினாலும் படம் ஓட ஓட அவரோட ஸ்டண்டுல நாம எல்லாருக்கும் அவரை புடிச்சுப் போயிடும்..

இளவரசி டமினாவும் அவரோட திமிரான பாத்திரத்துல நல்லாவே நடிச்சிருக்காங்க.. படம் முழுக்க டஸ்டனோட ஸ்டண்டுகளாத்தான் இருக்கும்.. எப்படியும் டஸ்டன் நிரபாரதிங்கறதோடதான் படம் முடியும்னு நமக்கு தெரிஞ்சாலும்.. திரைக்கதையை விறுவிறுப்பா அமைச்சிருக்காங்க..

படம் ஆரம்பிச்சு முடியற வரைக்கும் நேரம் போறதே தெரியாது..



No comments: