Oct 24, 2011

திகாரில் தீபாவளி கனிமொழி நவ.3க்கு தீர்ப்பு தள்ளிவைப்பு



கனிமொழியின் வக்கீல் அல்தாப் அகம்மது தனது வாதுரையில் , எனது கட்சிக்காரர் மீதான வழக்கில் விசாரணை முடிந்து குற்றச்சாட்டும் பதிவாகி முடிந்து விட்டது. இதனால் சாட்சியக்களை அழிப்பார் என்றோ கலைப்பார் என்றோ என்பதில் கேள்வி எழவில்லை. மேலும் இவருக்கு எந்தவொரு நிபந்தனை வேண்டுமானாலும் கோர்ட் விதிக்கட்டும், எந்நாளில் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று கேட்கப்படுகிறதோ அந்நாளில் தவறாமல் ஆஜராகி விடுவார் என்றும் கூறினார்.

இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கனிமொழியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கனிமொழிஒரு பெண் , பட்டதாரி அவர் ஒரு எம்.பி., இதனால் இவருக்கு ஜாமின் வழங்க வேண்டும், மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது உள்ளிட்ட சரத்துக்களை வலியுறுத்தி இன்று ஜாமின் மனு விவாதத்தை அவரது வக்கீல்கள் எடுத்துரைத்தனர். இருப்பினும் ஜாமின் உத்தரவு வரும் 3 ம் தேதிக்கு தள்ளிப்போனது. .

No comments: