Dec 29, 2011

புத்தாண்டு கொண்டாட நடிகை,நடிகர்கள் செல்லும் நகரங்கள் (படங்கள்)

புத்தாண்டு கொண்டாட கோலிவுட் ஹீரோயின்கள் காதலனுடன் திட்டமிட்டுள்ளனர். 2012ம் ஆண்டின் முதல் நாளை ஜாலியாக கொண்டாட கோலிவுட் நட்சத்திரங்கள் வெவ்வேறு திட்டங்கள் போட்டுள்ளனர்

ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் முகாமிடுகிறார்.

ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா, தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார். அதே போல் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் கோவா செல்கிறார்.

நடிகை த்ரிஷா தோழிகளுடன் சிட்னி பறக்கிறார். அவரது காதலரும் தனியே சென்று, பிறகு சிட்னியில் புத்தாண்டு அன்று த்ரிஷாவுடன் பார்ட்டியில் பங்கேற்க உள்ளாராம்.
காதலனுடன் ஜாலியாக புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் கலந்துகொள்கிறார். அங்கேயே தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.

. ஜெனிலியா, தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் பார்ட்டி வைத்து பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே சில கோலிவுட் நட்சத்திரங்கள் தனியாகவும் சிலர் தங்கள் மனைவியுடனும் புத்தாண்டு கொண்டாட முடிவு செய்துள்ளனர் .


சமீரா ரெட்டி இந்த வருட புத்தாண்டை எனது புதிய வீட்டில் கொண்டாட இருக்கிறேன். இப்போதே எனக்கு அதிக சந்தோஷத்தை அது தருகிறது. இதற்கு சினிமா நண்பர்களையும் அழைத்திருக்கிறேன். எனது குடும்பத்தினரும் எனக்காக வீட்டை அலங்கரிப்பதில் பிசியாக இருக்கிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஷூட்டிங்கிற்கு செல்லும் சிம்பு, அங்கேயே புத்தாண்டை கழிக்க உள்ளார்.
  இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் ‘இரண்டாம் உலகம் பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் தேதி அவரது மனைவி கீதாஞ்சலி ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் ‘துப்பாக்கி பட ஷூட்டிங்கில் நடித்து வரும் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார்.


அப்புறம் நீங்க எங்க யாரோட கொண்டாட போரிங்க?

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நமக்கென்ன அமலா பாலும், கிருத்திகா கூடவா புத்தாண்டை கொண்டாட குடுத்து வச்சிருக்கு. வீட்டம்மா கூடத்தான்

MaduraiGovindaraj said...

உங்களுக்கு அதுவே பெருசு போனபோகட்டும் பதிவு எழுத விட்டுருக்காங்க !

சித்திரவீதிக்காரன் said...

புத்தாண்டு அன்று மாலை தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நடிக, நடிகைகள் எங்கு வேண்டுமானாலும் கொண்டாடட்டும். நம்ம மதுரையில இருந்தாலே நமக்கு கொண்டாட்டந்தான். பகிர்விற்கு நன்றி.