Jan 17, 2012

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் வைகோ வாதாடினார்!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆஜராகி வாதாடினார். தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என என சென்னை ஐகோர்ட் 2010 செப்டம்பர் 28ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. வழக்கின் விசாரணை நடந்தது. நீதிபதிகள் லோதா, கோகலே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி வாதாடுகையில், ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல், மகாராஷ்ட்ர மாநிலத்தில் மாநில அரசின் அனுமதிக்கு எதிராக மக்கள் போராட்டத்தால் ரத்து செய்த பின்னர் தூத்துக்குடியில் 1994ல் நிறுவப்பட்டது. தேசிய கடல் பூங்கா எனும் 21 தீவுகள் இருக்கிற கடற்கரையிலிருந்து 25 கி.மீ.க்கு அப்பால்தான் ஆலையை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனையை மீறி இந்த ஆலை அமைக்கப்பட்டதாலும் அதுபோல பசுமை வளாகம் நிபபந்தனைப்படி அமைக்கப்படாததாலும் சுற்றுச்சூழலை, நிலத்தை, நீரை, காற்றை மாசுபடுத்துவதாலும் சென்னை ஐகோர்ட் ஆலையை நிரந்தரமாக மூடிட உத்தரவு பிறப்பித்தது. ஆலை தொடர்ந்து இயங்கினால் லட்கணக்கான மக்களுக்கு உடல்நலக்கேடு ஏற்படும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆலையை இயக்குவதற்கு லைசென்சுக்காக 15 நாட்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், லைசென்ஸ் கொடுப்பதா? இல்லையா? என்பதை நன்கு ஆய்வு செய்து வாரியம் முடிவு எடுக்கவேண்டும் என்றும் அடுத்த விசாரணை 2012 மார்ச் 28 ம் தேதி நடக்கும் எனவும் அறிவித்தனர். வழக்கில் வைகோவுடன், ம.தி.மு.க.,சட்டத்துறைச் செயலாளர் யு. தேவதாஸ், வக்கீல்கள் டில்லி ரவி, பாலாஜி, ஆசைத்தம்பி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் வக்கீல் பிரகாஷ் ஆகியோர் ஆஜராகினர். 

3 comments:

K.s.s.Rajh said...

என்னமோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி

Unknown said...

அருமையானபகிர்வுக்கு நன்றி தல

Unknown said...

அருமையானபகிர்வுக்கு நன்றி தல