May 29, 2012

நடக்க நடக்க, "ஆயில்' குறையும்! ஆயுள் கூடும்.!!


எரிபொருளை மிச்சப்படுத்துவதால் என்ன பலன்? மிச்சமான எரிபொருளை மட்டும் வைத்து, சென்னையிலிருந்து மதுரை வரை சென்றுவிட முடியாது தான். அதேசமயம், கூட்டம் அதிகமிருக்கும் "பங்க்'கைத் தவிர்த்து, அடுத்த "பங்க்' வரையாவது செல்ல முடியும். இல்லாவிட்டால், எந்த வண்டியாக இருந்தாலும், தள்ளு வண்டியாக மாறிவிடும்.
எரிபொருள் சிக்கனத்துக்கான சில எளிய வழிகள் இதோ:

* முதலில், வாகனத்தை, "சர்வீஸ்' செய்யுங்கள். எண்ணெய் கசிவு நீக்குங்கள். "மைலேஜ்' பரிசோதனை செய்யுங்கள்.
* சிக்னலில் 30 வினாடிக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், வண்டியை அணைத்துவிடுங்கள்.
* தேவைப்படும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், "பிரேக்' பிடிக்காதீர்கள்.
* எந்நேரமும், "கிளட்ச்'சில் கால் / கை வைக்காதீர்கள்.
* குறிப்பிட்ட வேகத்துக்கு எந்த, "கியரோ' அந்த வேகத்தில் அந்த, "கியரை' பயன்படுத்துங்கள்.
* இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தாதீர்கள்.
* எந்தப் பயணம் மேற்கொள்ளும் முன்பும், இது தேவை தானா என ஒரு முறை சிந்தியுங்கள். முடிந்தால், தொலைபேசியிலேயே வேலையை முடிக்கப் பாருங்கள்.
* குழுவாகச் செல்லும்போது மட்டும் படகு கார்களைப் பயன்படுத்துங்கள்.
* தனியாகச் செல்ல நேர்ந்தால், இரு சக்கர வாகனங்கள் உத்தமம்.
* எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பஸ், ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.* ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு, நடந்தே செல்லப் பழகுங்கள். நடக்க நடக்க, "ஆயில்' குறையும்; ஆயுள் கூடும்.
நன்றி தினமலர் 

2 comments:

Thava said...

பல நல்ல ஐடியாக்கல் சகோ..இதை பின்ப்பற்றுவது என்பது கடினம்தான்.முயற்சித்தால் எதையும் செய்யலாம்.கண்டிப்பாக டிரை பண்றேன்.பகிர்வு அருமை.நன்றி.

rajamelaiyur said...

//நடக்க நடக்க, "ஆயில்' குறையும்; ஆயுள் கூடும்.
//

ரொம்ப நல்லது .. இன்னும் கொஞ்ச நாளுல எல்லாரும் கால நடையா போக வேண்டியதுதான்