Oct 31, 2011

சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 கட்டடங்களுக்கு சீல்




 சென்னை, தி.நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை தியாகராய நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு மாதம் முன்னரே அறிவிப்பும் கொடுத்திருந்தது. எந்த நடவடிக்கையும் இல்லாத சூழ்நிலையில், கடந்த வாரம், சென்னை உயர்நீதிமன்றம் இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை கண்டித்தது.
இந்நிலையில், இன்று காலை 5 மணி முதல் தி.நகர் பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில், சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டனர்.
சில கட்டடங்கள் வர்த்தகக் கட்டடங்கள் என்பதால், இரவு தூங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் உள்ளிருப்பில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரிகள் அவர்களை வெளியேற்றிய பிறகு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனார்.

No comments: