காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு ராஜபக்சே பேச்சு: கனடா பிரதமர் புறக்கணிப்பு
பெர்த் நகரில் காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.
இலங்கையில் 2013ம் ஆண்டு அடுத்த காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 53 நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து உரை நிகழ்த்தினார்.
ராஜபக்சேவை மாநாட்டில் பேச அழைக்கப்பட்டதும் கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹாபர், மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் ராஜபக்சேவுக்கு தனது எதிர்ப்பை காட்டினார்.
கடந்த வாரம் ராஜபக்சேவுடன், ஸ்ரீபன் ஹாபர் நேரடியாக பேசியிருந்தார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவரிடம் விவாதித்தார். காமன்வெல்த் கூட்டத்திற்கு முன்பாக இதற்கு இலங்கை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உறுதிப்பட கூறியிருந்தார். அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்சேவின் உரையை புறக்கணிப்போம் என்று கூறியிருந்தார். அதன்படி ஹாபர் வெளிநடப்பு செய்தார்.
இதில் இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் ழூசுப் ரசா கிலானி உள்பட 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு நேற்று விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை, இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி சந்தித்தார்
No comments:
Post a Comment