இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு கடந்த சில நாட்களாகவே வைரஸ் காய்ச்சலும், லேசான நெஞ்சுவலியும் இருந்து வந்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை ஜீவாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம்(31.10.11) இரவு 10மணியளவில், ஜீவாவிற்கு நெஞ்சுவலி அதிகமாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தெலுங்கு படத்தின் இசையமைப்புக்காக இளையராஜா ஐதராபாத் சென்று இருந்தார். தகவல் அறிந்து உடன் அவர் சென்னை திரும்பிவிட்டார்.
மறைந்த ஜீவாவின் உடல் நேற்று சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. ஜீவாவின் உடலுக்கு மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க.,தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், , தயாரிப்பாளர்கள் பஞ்சு அருணாச்சலம், உதயநிதி ஸ்டாலின், டைரக்டர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, வஸந்த், சந்தானபாரதி, மகேந்திரன், நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, விஷால், நடிகைகள் குஷ்பூ, அபர்ணா, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, ஸ்ரீகாந்த் வேதா, உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்கில் டைரக்டர்கள் பாரதிராஜா, விஷ்ணுவர்தன், ஸ்டான்லி, அமீர், லெனின், ரத்னகுமார், நடிகர்கள் வைபவ், ஜெய், விஜய் வசந்த், சிவா, கிருஷ்ணா, மற்றும் இளையராஜாவின் மகன், மகள் மற்றும் குடும்பத்தார் கங்கை அமரன், பிரேம்ஜி அமரன், வெங்கட்பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பின்னர் ஜீவாவின் உடல் நேற்று இரவு 12.50 மணியளவில் இளையராஜாவின் சொந்த ஊரான தேனிமாவட்டம் அருகேயுள்ள பண்ணபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இன்று(02.11.11) மதியம் 12.30 மணியளவில் கூடலூர்-லோயர்கேம்ப் ரோடு அருகேயுள்ள இளையராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment