Oct 28, 2011

பூமிக்கு ஆபத்து இல்லை சூரியனை நெருங்கி வரும் வியாழன்



சூரியனுக்கு அருகே வியாழன் கிரகம் நெருங்கி வரும் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது:
சூரியக் குடும்பங்களில் உள்ள கிரகங்களில் வியாழன் கிரகம் மிகப் பெரிது. சூரியனைச் சுற்றும் போது 398.9 நாள்களுக்கு ஒரு முறை சுற்றுப் பாதையில் சூரியனுக்கு நேர் எதிரில் வியாழன் கிரகம் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு இன்று (29-ந் தேதி) நடக்கவுள்ளது. இதனை நாம் பூமியில் இருந்தே எளிதாகக் காணலாம்.
பொதுவாக பூமிக்கும் வியாழனுக்கு இடையே உள்ள தூரம் 92 கோடி கிலோ மீட்டர். ஆனால் சூரியனுக்கு நேர் எதிராக வியாழன் வரும்போது பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயுள்ள தூரம் மிகவும் குறைந்து விடும். இந்த தூரம் 92 கோடி கிலோ மீட்டரிலிருந்து இருந்து 59.3 கோடி கிலோ மீட்டராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவை நேர் எதிரில் வருவதால் வியாழன் மீது சூரிய ஒளி முழுவதும் படுவதாலும், பூமிக்கு அது நெருங்கி வருவதாலும் வியாழன் கிரகத்தை பூமியில் இருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய நேரங்களில் வியாழன் கிரகம் வெளிச்சமாகக் காணப்படும். இந்த நிகழ்வு ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் என்றாலும் நம்மால் மூன்று நாள்களும் தெளிவாக வியாழன் கிரகத்தை பார்க்கலாம். இதனை நேரடியாகவும், டெலஸ்கோப் வழியாகவும் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் 29 முதல் 31-ந் தேதி வரை இரவு 7 மணியில் வியாழன் கிரகத்தைப் பார்க்கலாம். பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பிர்லா கோளரங்க நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதே போன்றொரு நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. அடுத்ததாக 2012-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதியும் மீண்டும் இந்த நிகழ்வு நடக்கும் என்றார்..
Posted By: கோவீந்தராஜ்

4 comments:

stalin wesley said...

நல்ல விஷயம் சொன்னிங்க நண்பா ..

நன்றி

stalin wesley said...

அந்த word verification ன கொஞ்சம் எடுத்து விடுங்களேன் ...

தேன் நிலா said...

தகவலுக்கு நன்றிங்க ஐயா..!!

தேன் நிலா said...

வேர்ட் வெரிபிகேஷன் நீக்க இந்தப் பதிவைப் பார்க்கவும்.

உங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க

உங்களுக்காகவே இப்பதிவை எழுதினேன். மறக்காமல் வந்து பார்த்துவிட்டு பயனடையுங்கள்..!! பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளையும் தெரிவிக்கலாம்.