Jan 13, 2012

ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த நாளை !

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்.......

கார்னல் ஜான்பென்னிகுக்கின் தியாகம் கடலை விடமிகப்பெரியது..

 பெரியாறு அணை விவகாரத்தில்  மக்கள் நடத்திய போராட்டத்தால் தமிழகம் முழுவதும்  பென்னி குக் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில் பொங்கலன்று அவரது 171வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை  சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

லண்டனை சேர்ந்த ராணுவ ஜெனரல் ஜான் பென்னிகுக், சாரா தம்பதிகளின் மகன் பென்னிகுக். ஜான் பென்னிகுக் இந்தியாவில் ராணுவ ஜெனரலாக பணியாற்றினார். அப்போது 1841 ஜனவரி 15ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பென்னிகுக் பிறந்தார். இவர் லண்டன் பொறியியல் கல்லூரியில் ராயல் இன்ஜினியரிங் படித்து ராணுவத்தில் பணியாற்றினார். 1858ல் இந்தியாவிற்குவந்து பணி செய்தார். 1874 முதல் முல்லை பெரியாறு அணை சர்வே பணி முழுவதுமாக ஏற்றார்.
தனது மனைவியின் சொத்துக்களை ^42 லட்சத்திற்கு விற்றும், தமிழக விவசாயிகளிடம் பணம் வசூல் செய்தும் அணையை கட்டினார். 

திட்டமிட்டப்படி 1895ல் கட்டி முடிக்கப்பட்ட பெரியாறு அணையை அதே ஆண்டு அக்டோபர் 10ம் தேதி சென்னை கவர்னர் லார்டு வென்லாக் திறந்து வைத்தார். 
தண்ணீர் அணை வழியாக செல்வதை கண்டு பென்னிகுக் ஆனந்த கண்ணீர் வடித் தார். இவரின் விடா முயற்சியால் தென்னகத்தில் உள்ள 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. 5 மாவட்டத்திற்கு குடி தண்ணீராகவும் பெரியாறு அணை திகழ்கிறது.

அவரது பெயரை தெருவுக்கு, குழந்தைகளுக்கு சூட்டி, பொங்கலன்று அவரது படத்தை வைத்து பொங்கலிட்டு தென் மாவட்ட மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

3 comments:

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் இன்றுதான் உங்கள் தளத்துக்கு வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் சுவாரஸ்யமாக இருக்கு இனி தொடர்ந்து வருவேன் வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் கோவிந்தராஜ் - முல்லைப் பெரியார் அணையை தன் சொந்த செலவில் கட்டி - தமிழக மக்களுக்கு உதவிய - பென்னி குக்கினைப் பாராட்டி - அவரது 171வது பிறந்த தினத்தினைப் பொங்கலன்று மக்கள் விமரிசையாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்கிறார்கள். பதிவு நன்று - நல்வாழ்த்துகள் கோவிந்தராஜ். நட்புடன் சீனா

Unknown said...

அருமையான தகவல்!உங்களுக்கு பாராட்டுகள் மக்கா!பொங்கல் வாழ்த்துகள் நண்பரே!