Jan 15, 2012

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

தமிழகத்தில்இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா? என, பெரிய சட்டபோராட்டமே நடந்தது. காளைகளை சாகசக்காட்சி விலங்குகளாக பயன்படுத்த தடை விதித்து, 2011 ஜூலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி பிராணிகள் நலவாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது,பொங்கல் திருவிழாவான இன்று, குதூகலத்துடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. ஐகோர்ட் உத்தரவுப்படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துள்ளி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் தயாராகிவிட்டனர்.

தமிழக அரசிடம் கருத்து கேட்காமல் வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர். நீதிபதிகள், ""ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடந்தது தொடர்பாக, ஜன., 30ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், இந்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும்,'' என உத்தரவிட்டனர்.

2 comments:

அனுஷ்யா said...

//துள்ளி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் தயாராகிவிட்டனர்.
//

நீங்க...?

Unknown said...

நீங்க...மாட்டை அடக்கினீங்களாமே!..பெரிய வீரர் தான் நீங்க ஹஹ
ஜல்லிகட்டை தடை செய்து தமிழர்களின் பெருமையை அழிக்கமுடியாது


தெடர்புடைய இடுகை..:

"அவனியாபுரம்" சென்ற பதிவர்’ஸ்(மாட்டை அடக்க!!!!!!?????????)