இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.
வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது. பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார்.




