Nov 28, 2011

கேரளாவில் முழுஅடைப்பு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது


கேரளாவில் இன்று கடையடைப்பு நடப்பதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.3 கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரபலமானதாகும். இங்கு ஒட்டன்சத்திரம் சுற்றுப் பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இதில் 80 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதிப்பதை கண்டித்து கேரளாவில் விவசாயிகள், வர்த்தகர்கள் இன்று முழு கடையடைப்பு நடத்துகின்றனர். இதனால் கேரள மாநில வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வராததால் ரூ.3 கோடி வரை  காய்கறி வியாபாரம் பாதித்துள்ளது. இடுக்கியில் பந்த் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு இன்று பந்த் நடந்து வருகிறது. இதனால் பஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.


கம்பத்தில் இருந்து கேரள பகுதியான ஏலப்பாறை, கட்டப்பணை, நெடுங்கண்டம் பகுதிகளுக்குச் செல்லும் தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு தேனி, திண்டுக்கல்லுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கேரள மாநிலம் வண்டிபெரியாறு மற்றும் கட்டப்பணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் கேரள அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன. மூணாறு, குமுளி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு, வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட் டதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா. பகுதியிலிருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இதே கோரிக்கையை வலியுறுத்தி இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், ஆழப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முழு அளவில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேரள எம்.பிக்கள் தர்ணா !
நாடாளுமன்றத்தில் கேரள எம்.பிக்கள் தர்ணாவில் ஈடுப்பட்டனர். முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டக்கோரி கேரள எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நாடாளுமன்றத்தின் முன்பு காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.


No comments: