முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வசித்து வந்தார். சமீபகாலமாக சசிகலா மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திடீரென சசிகலா மீதும், அவரது குடும்பத்தினரும் மீதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து அவர்களை விலக்கி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1. வி.கே.சசிகலா (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்)
2. ம.நடராஜன்
3. திவாகர் (மன்னார்குடி)
4. டி.டி.வி. தினகரன்
5. வி. பாஸ்கரன்
6. வி.எம்.சுதாகரன்
7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ்
8. எம்.ராமச்சந்திரன்
9. ராவணன்
10. மோகன் (அடையாறு)
11. குலோத்துங்கன்
12. ராஜராஜன்
13. மகாதேவன்
14. தங்கமணி
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது தமிழகத்தில் உள்ள ஜெயலலிதா ஆட்சியில், சசிகலாவின் தலையீடு அதிமாக இருந்தால் இந்த அதிரடி முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியில் திட்ட அமலாக்கத்துறையிலிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தை நியமிக்கப்பட்டதற்கு சசிலாகவே காரணம் என கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நியமனத்தில் சசிகலாவின் தலையீடு அதிகமாக இருந்தால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
மூன்றாவது முறையாக பதவியேற்ற ஜெயலலிதா, பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைச் செயலாளர்கள், பல அமைச்சர்கள் அடிக்கடி மாற்றினார். திட்ட அமலாக்கத்துறையிலிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தை நியமிக்கப்பட்டதற்கு சசிலாகவே காரணம் என கருதப்பட்டது. இதனையடுத்து கடுப்பான ஜெ, பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கினார்.
இப்படி சசிகலாவின் அடுத்தடுத்த செயல் ஜெயலலிதாவிற்கு அதிர்ச்சியாக அமைந்தது. மேலும் தனது உறவினர்களுக்காக கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா தலையீட்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி கட்சியை கைபற்றும் எண்ணமும் சசிகலாவிற்கு இருப்பதாக உணர்ந்த, தற்போது பொறுமையை இழந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment