Dec 21, 2011

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V

(முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V க்கு கண்டன கடிதம் , நான் ஈமெயில் அனுப்பியது  உங்கள் பார்வைக்காக )

வணக்கம் நான் கோவிந்தராஜ் மதுரை , நேற்று (21/12/2011) செய்தியில் கேரளாவில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளீர்கள் உங்கள் விளம்பரம் "சிலர் இந்தப்பக்கம் சிலர் அப்படியே அந்தபக்கம் " ஆனால் நீங்கள் கேரளா பக்கமா ? தமிழர்களை கேரளவினர் தாக்கவில்லையா ? என்ன நடுநிலையோ ! கேரளாவில் கலக்டரிடம் பேட்டி,  ஆனால் தமிழகத்தில் எந்த அதிகாரியிடம் பேட்டி வாங்கினீர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாத செய்திகள் 

கேரளத்தினர் வெறி: இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால்  உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

கேரளாவில் உள்ள குமுளி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தால் அவர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. அணையில் 136 அடி உயரத்துக்கு நீரை தேக்குவது பாதுகாப்பானது அல்ல. எனவே அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும். அணை பலப்படுத்தப்பட்டு இருப்பது அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது ஏற்கக்கூடியது அல்ல.


116 ஆண்டு கால அந்த அணை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அதற்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது.


முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவில் பேரழிவு ஏற்படும். 5 மாவட்டங்களில் உள்ள 14 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவும், சுமுகமான தீர்வு காணவும் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கைகளும், உத்தரவாதங்களும் கொடுத்துள்ள போதிலும் நெடுங்கண்டம், கைலாசபாறை, மனப்பாடு, உடுமன்சாலை போன்ற கேரள கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சில சமூக விரோதிகளால் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகின்றனர்.


கேரளா எல்லையில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது கற்கள் வீசப்படுவது, தீயிடப்படுவது போன்ற செய்திகள் கேரளாவில் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. கேரளாவைத் தங்களது சொந்த நாடாக கருதி நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வர மறுத்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டனர்.


எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட்டு கேரளாவில் வாழும் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மலையாளிகளுக்கும்,  மலையாள நிறுவனங்களுக்கும் தமிழக போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது.    ஆனால்,  கேரளாவில் மலையாள போலீசார் வெறிபிடித்து தமிழர்களை தாக்குகிறார்கள்.

 மு  ல்லை பெரியாறு பிரச்சணை தொடங்கிய நாளில் இருந்து தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பகதர்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். 


அதன் பிறகு தமிழின உணர்வாளர்கள் தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கடைகள் மீது முற்றுகை , தாக்குதல் தொடுத்தனர்.


தோடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவதால் கேரளாவுக்கு செல்லும் பால், காய்கறிகளை செல்லவிடாமல் தமிழர்கள் தடுத்து வந்தனர். 

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக தோட்ட தொழிலாளிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. 


ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக எல்லையில் உள்ள பல்வேறுகோயில்களில் மாலை கழட்டி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்ததால் கேரள அரசுக்குவருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 


இதனால் தமிழக பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர கேரள அரசு உதவி செய்யும் என்று சொன்னதால் தமிழக பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு செல்ல தொடங்கினார்கள்.


 சிவகங்கை மாவட்டம் பரமக்குடி ஹரி , கார்த்திக் தலைமையில் ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு, மருதுபாண்டியர் நகர், வேந்தொனி மற்றும் சில கிராமங்களைச் சேர்ந்த 35 பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர்.


இன்று ஞாயிற்று கிழமை காலை பம்பையில் உள்ள ஒரு உணவு விடுதியில் உணவருந்திவிட்டு வெளியே வரும் போது 5 பேர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றவர்கள் இதை கேட்டதால் அவர்களையும் அடித்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த மலையாள காவல் துறையும் தமிழக பக்தர்கள் மீது தாக்கி அவர்கள் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர்.   அதனால் அவர்களில் 20 பேரை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். 


அவர்களுடன் சென்ற மற்ற பக்தர்களின்  வைத்திருந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர் மலையாள போலிஸ். இந்த தகவல் உறவினர்களுக்கு தெரிந்ததால் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை நீர் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை என்றால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஆகிய 4 மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்படும்.

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கேரளா எல்லையில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது கற்கள் வீசப்படுவது, தீயிடப்படுவது போன்ற செய்திகள் கேரளாவில் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. கேரளாவைத் தங்களது சொந்த நாடாக கருதி நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வர மறுத்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டனர்.//

இதென்னய்யா கொடுமையா இருக்கு, இரு மாநிலமும் அமர்ந்து பொறுப்பான ஒரு முடிவை எடுக்கவேண்டும்...!!!

கோவிந்தராஜ்,மதுரை. said...

நன்றி நாஞ்சில் மனோ

PUTHIYATHENRAL said...

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு விரோதமாக நடக்கும் தினமலர், தினமணி, இவர்கள் லிஸ்டில் இந்த டிவியையும் சேர்க்க வேண்டியதுதான். தனி தமிழகம் கண்டதும் இவர்களுக்கு இருக்கு ஆப்பு.

ந.ர.செ. ராஜ்குமார் said...

மலையாள நிறுவனங்களின் விளம்பரங்கள் வேண்டியோ! என்னவோ?!!