Dec 24, 2011

டேம் 999 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு :தமிழர்கள் கொதிப்பு !


டேம் 999 படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தமிழராக இருந்து கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இப்படி கூறலா மா? என்று தமிழர் அமைப்புகள் குமுறுகின்றன. முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச பிரச்னையாக்க மலையாளத்தை சேர்ந்த சோஹன் ராய் என்பவர் கேரள அரசின் ஆதரவுடன் எடுத்த படம் தான் டேம் 999. இந்தப் படத்திற்கு வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகள் நிதியுதவி செய்துள்ளனர். 


இந்தப் படத்தை வெளி யிட்டு தமிழகத்திற்கு சர்வதேச அளவில் நெருக் கடி ஏற்படுத்த வேண்டும் என்பதே சோஹன்ராயின் நோக்கம். இந்தப் படத்திற்கு டேம் 999 என்று பெயரிட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையின் 999 ஆண்டு குத்தகை காலம் தான் காரணம். ஆனால் இது முல் லைப் பெரியாறு அணை யின் கதை இல்லை என்று ஊர் ஊராகப் போய் விளக்கிய சோஹன்ராய், அணை இடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் ஒரு அணை உடைந்து பல லட்சம் பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கிராபிக்ஸ் காட்சி வருகிறது. 
                 இது மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது போல் உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் திரையிட இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இப் படத்தை தடை செய்ய உத்தரவிட்டார். 
இந்நிலையில் டேம் 999 படத்தின் இரு பாடல் கள் தற்போது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல்கள் வெற்றி பெற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆஸ்கர் விருதுக்கான படங்களின் போட்டியில் டேம் 999 திரைப்படமும், அதன் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடல்களில் ஏதாவது ஒன்றாவது ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்று கடவுளின் வேண்டுகிறேன்”. என்றார். தமிழகத்தில் பெரும் புயலையும், சர்ச்சையையும் கிளப்பிய இப்படத்துக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கருத்து தெரிவித்திருப்பதையறிந்த தமிழ் ஆதரவு அமைப்புகள் குமுறுகின்றன. அவருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள

No comments: