Dec 11, 2011

முல்லை பெரியாறு பிரச்சினை: டிசம்பர் 15-ல் தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் : ஜெ.முடிவு


முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகம், கேரளா இரு மாநிலங்களுக்கிடையே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் இன்று 2--வது நாளாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 15-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டம் வியாழன் அன்று காலை 11 மணிக்கு தொடங்கும் எனக்கூறினார்.


மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகையில், முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழகம் தனது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது. நமது உரிமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். முல்லை பெரியார் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் மூலமே தீர்வு காணமுடியும். கேரள மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதால் மட்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. ஆகவே எல்லையில் போராட்டம் நடத்து மக்கள் உணர்ச்சிவசப்படாமல் உடனே கலைந்து செல்லவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: