Dec 12, 2011

சீனா ராணுவதளம் இந்திய பெருங்கடலில் அமைக்கிறது இந்திய கடற்படை கவலை! ( காணொளி)


இந்திய பெருங்கடலின் ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ராணுவ தளத்தை அமைக்க இருப்பதாக சீனா அறிக்கை விடுத்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பினால் இந்தியா பெருங்கவலை அடைந்துள்ளது. கண்காணித்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ரணுவத் தளத்தை அமைப்பதால், இந்தியாவை சீனா உளவு பார்ப்பதற்கும் இது வசதியாகி வடும் என்று இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. 


இந்தக் கடல் பரப்பில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த கடலிலிருந்து 10,000 சதுர கி.மீ பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை தோண்டியெடுக்க ஐ.நா வின் உத்தரவினை சீனா பெற்று விட்டது. இதனால் இந்தியா எதிர்க்கவும் இயலாத நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மேற்கு பகுதியிலிருந்தும் அதனை கண்காணிக்க அந்த ராணுவ தளம் சீனாவுக்கு உதவக்கூடும் என்று கருதப்படுகிறது. 

இதனையடுத்து, சில நாட்களுக்கு முன்பு ஷெசல்ஸ் நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்ற சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங் லீ, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பியுள்ளார். ராணுவத் தளத்தோடு, ஷெசல்ஸ் நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது.  இதனால் இந்தியா குறிப்பாக இந்தியக் கடற்படை மிகவும் கவலையடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: