பாகிஸ்தானுக்கு வழங்கும் ரூ.3,500 கோடி நிதியுதவியை ரத்து செய்வதற்கான சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து பாகிஸ்தான் அமெரிக்க உறவில் நெருக்கடி முற்றியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் அழித்து வருகின்றனர். தீவிரவாதிகளும் நேட்டோ படைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அமெரிக்க வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் நேட்டோ விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதற்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி, ராணுவ தளபதி கியானி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேட்டோ படை தாக்குதல், தவறுதலாக வீரர்கள் முகாம் மீது நடத்தப்பட்டு விட்டது என்று அமெரிக்கா மன்னிப்பு கேட்டது. அதை ஏற்க மறுத்த பாகிஸ்தான், நாட்டில் முகாமிட்டுள்ள விமான படை தளத்தை காலி செய்து வெளியேற நேட்டோ படைக்கு உத்தரவிட்டது. அதன்படி அமெரிக்க விமானப் படை வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறினர். இதற்கிடையில், பாகிஸ்தானுக்கான ரூ.3,500 கோடி நிதியுதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர்.
ஆனால், அதிபர் ஒபாமா அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், Ôபாகிஸ்தானுக்கான நிதியுதவி ரத்து செய்யப்பட மாட்டாது. தீவிரவாத ஒழிப்பு, பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு நடத்தும்Õ என்று தெரிவித்தன. பாகிஸ்தானில் உள்ள பல சட்டவிரோத தொழிற்சாலைகளில், அமோனியம் நைட்ரேட் மூலம் ஐஇடி எனப்படும் அதிநவீன வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு கடத்தப்படுகின்றன. அந்த குண்டுகள் மூலம் தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதனால் அமெரிக்க வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். எனவே, பாகிஸ்தானில் ஐஇடி வெடிகுண்டுகள் தயாரிப்பு, கடத்தல், பரவல் போன்ற எல்லாவற்றையும் தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதுகுறித்து, உறுதிமொழி எதுவும் இதுவரை பாகிஸ்தான் வழங்காததால், அந்த நாட்டுக்கான ரூ.3,500 கோடி நிதியுதவியை அமெரிக்கா நேற்று ரத்து செய்துள்ளது. Ôஅமெரிக்க பாதுகாப்பு அதிகார சட்டம் 2012Õ தொடர்பான சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடந்தது. இந்த சட்டத்தில் பாகிஸ்தானுக்கான நிதியுதவி ரத்து, ஈரான் மீது கடும் பொருளாதார தடை போன்ற பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் குறித்த ஓட்டெடுப்பில், பாகிஸ்தானுக்கு நிதியுதவி ரத்து செய்ய 283 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். இதையடுத்து சட்டம் நிறைவேறியது.
1 comment:
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
Post a Comment