கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். லோயர் கேம்ப்பில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதட்டம் நிலவுகிறது. சுருளிப்பட்டி, கருணாக்கமுத்தன்பட்டி, கம்பம், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கம்பத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.
கூடலூரில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுப்பையும் மீறி லோயர் கேம்ப் பகுதியில் பேரணியாக விவசாயிகள் சென்றனர். தென்மண்டல ஐஜி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி செல்லக்கூடாது என்று விவசாயிகளிடம் சொன்னார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறை மீது கல்வீச்சு நடந்தது. இதனையடுத்து போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடந்தது. காவல்துறை தடியடியால் விவசாயிகள் சிதறி ஓடினர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. கண்ணீர் புகை குன்ன்டு வீசியதால் பெரும் பரபரப்பு .
காலையில் மறியல் செய்த வைகோ கைது செய்யப்பட்டது குறிபிடத்தக்கது
5 comments:
Good post boss
Try to visit my blog www.kingraja.co.nr
என்னத்தை சொல்ல போங்க...
போலீஸ் பொறுக்கிகளுக்கு அப்பாவி மக்களை அடக்கி ஒடுக்கத்தான் தெரியும் வேறு என்ன தெரியும். உலகில் நம்பர் ஒன் ரவுடிகளும் பொறுக்கிகளும் நிறைந்த ஒரு துறைதான் இந்திய காவல்துறை. காவல்துறை இல்லை கயவர்கள் துறை.
வந்தவங்க அனைவருக்கும் நன்றி
Post a Comment