Nov 16, 2011

இந்தியர்கள்! 40,000 பேர் வேலைக்கு உலை வைத்தது யு.கே-


வரும் ஆண்டில் 40,000 பேருக்கு வேலை கிடைக்காத வகையில் புதிய ஆள் குறைப்பு நடவடிக்கையை இங்கிலாந்து மேற்கொண்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியர்கள்தான்.


பற்றாக்குறை வேலைப் பட்டியல் என்ற பிரிவின் கீழ் பல்வேறு பணிகளை ரத்து செய்துள்ளது இங்கிலாந்து அரசு. இதனால் வரும் ஆண்டில் ஐரோப்பியர்கள் அல்லதா பிற நாடுகளைச் சேர்ந்த 40,000 பேருக்கு வருகிற ஆண்டில் இங்கிலாந்தில் வேலை பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள் என்பது இங்கு முக்கியமானது.

இதுதொடர்பாக குடியேற்ற ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரையை பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஆள் குறைப்பு நடவடிக்கையில் சேர்ந்துள்ள புதிய துறைகள் - பார்மஸி, கால்நடை மருத்துவர்கள், பேச்சு மற்றும் மொழி தெரபிஸ்டுகள் ஆகிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பிரிவினர் ஆவர்.

இவை தவிர செகண்டரி கல்வி உயிரியல் ஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள், வெல்டர்கள் உள்ளிட்ட மேலும் சில பணிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் இந்தப் புதிய நடவடிக்கையால் அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு வரும் ஐரோப்பியர்கள் அல்லாத வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதன் மூலம் உள்ளூர் ஆட்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்பது இங்கிலாந்து அரசின் திட்டமாகும்.

No comments: