Nov 19, 2011

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் சிபிஐ ரெய்டு!:அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்

அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக தனியார் செல்போன் நிறுவனங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லியிலுள்ள தனியார் செல்போன் நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிரடி சோதனையில் ஈடுப்பட்டது. உச்ச நீதிமன்றம் தலையீட்டால் சிபிஐ கடந்த சில மாதங்களாக இந்த அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இன்று நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் வீட்டில் சி.பி.ஐ சோதனை

தனியார் செல்போன் நிறுவனங்களைத் தொடர்ந்து முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் வீடுகளிலும் சி.பி.ஐ அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என மத்திய புலனாய்வு துறை விளக்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த சோதனை நாளையும் தொடரும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

2 comments:

தமிழ்கிழம் said...

// சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன //

நண்பா எது கிடைச்சா என்ன, நம்மகிட்ட சொல்லவா போரானுக??

கடைசி வரை மக்கள் முட்டாள்கள் தான்..

நாமாவது நம்மால் இயன்றதை செய்வோம் என்ற நோக்கில் பதிவு இட்டமைக்கு நன்றிகள் பல...

MaduraiGovindaraj said...

நாம சொல்லுறத சொல்லிவைப்போம்

நன்றி தமிழ் கிழம் அவர்களே !