மதுரையில் அழகிரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.பேட்டியின்போது அவர் கூறியதாவது:
உள்ளாட்சித்தேர்தலுக்குப்பின் தி.மு.க., எழுச்சியுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தைக் கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற போராட்டங்களில் திமுக தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இதனால் திமுகவினர் எழுச்சியுடன் உள்ளனர்.
சமீபத்தில் வயலார் ரவியை சந்தித்தபோது, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மதுரையில் இருந்து சேலம், அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன். அவற்றை பரிசீலிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் மதுரைப் பிரிவை மூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு மக்கள் நலத்திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது என அழகிரி தனது பேட்டியின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment