நாகர்கோவில் கிருஷணன் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வந்த தமிழக பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அணுமின் நிலைய விவகாரத்தில் யுரேனியம் போன்ற எரிபொருளுக்கு அந்நிய நாடுகளை சார்ந்து இருக்க கூடாது. நமது நாட்டில் கிடைக்கும் தோரியம் போன்ற எரிபொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நமது நாட்டிலேயே எரிபொருளை தயாரிக்க
வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என அப்துல்கலாம் கூறியதை போராட்டக்காரர்கள் கொச்சை படுத்தக்கூடாது. அப்துல்கலாம் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். இந்தியா வல்லரசாக வேண்டும். தனது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருபவர். அவர் கூறுவதை ஏற்கவேண்டும். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

No comments:
Post a Comment