பொட்டு சுரேஷ் விடுதலை
மு.க. அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ், கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி, மதுரை திருமங்களத்தை சேர்ந்த பாப்பா கொடுத்த நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். அடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட நான்கு வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மாதம் தன் மீதான குண்டர் சட்டத்தை நீக்க வேண்டும் என்று குண்டர் தடுப்பு போர்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
பின்னர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந் தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரம் அடங்கிய பெஞ்ச், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்படும் நிலையில் அவர் மீது வேறு ஒரு வழக்கு விசாரணை நடந்தது. அந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துவிட்டதால், இன்று விடுதலையானார்.
பாளையங்கோட்டை சிறையில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் அவரது ஆதரவாளர்களூடன் ஆரவாரமாய் மதுரை வந்தார்.
மதுரையில் மு.க.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டவர் பொட்டு சுரேஷ். பொட்டுவின் தடாலடியால் கட்சியினரே அதிர்ந்தனர். ஒரு கட்டத்தில் அழகிரியே அதிர்ந்து போனார்.
மதுரையில் திமுகவின் செல்வாக்கு சரிந்து போனதற்கு பொட்டுபோட்ட ஆட்டம்தான் என்பதை அழகிரியே உணர்ந்தார்.
இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நில மோசடி, கொலை உட்பட பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் டெல்லிக்கு சென்ற அழகிரி, பொட்டு சுரேஷ் கைதின் போதும் டெல்லியே முகாமிட்டிருந்த அழகிரி, கடந்த ஒரு மாதமாக மதுரையில் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
பொட்டு சுரேஷுக்கு நேற்று முன் தினம் ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்ததும், அண்ணனைத்தான் ( அழகிரி)முதலில் சந்திக்க வேண்டும் என்று சிறையில் சந்திக்க போனவர்களிடம் சொல்லியிருக்கிறார் பொட்டு.
இதைக்கேள்விப்பட்ட அழகிரி, இந்த நேரத்தில் பொட்டுவை சந்திக்க விரும்பாததால், அவர் நேற்று இரவு மதுரையில் புறப்பட்டு சென்னை வந்தார்.
இன்று காலை 11 மணிக்கு பொட்டு சுரேஷ் விடுதலையானார். ஆனால் அழகிரி சென்னையில் இருந்து
டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார்.

No comments:
Post a Comment