Dec 6, 2011

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி ஸ்பைஸ்ஜெட் விமான சர்வீஸ் !குறைந்தபட்ச கட்டணம் 1499

சென்னை  தூத்துக்குடி இடையே தினசரி விமான சர்வீசை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. குறைந்த கட்டணம் மற்றும் தரமான சேவையின் மூலம் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. மற்ற விமான நிறுவனங்களை ஒப்பிடுகையில், மிகவும் குறைவான கட்டணத்தில் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சர்வீஸ்களை இயக்கி வருகிறது.
 தற்போது, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நாளை முதல் நேரடி சர்வீஸ் தொடங்கப்படுகிறது. தினமும் இந்த சர்வீஸ் உண்டு. சென்னையில் இருந்து காலை 9.40க்கு கிளம்பும் ஸ்பைஸ்ஜெட் விமானம் காலை 11.05 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். பின்னர் தூத்துக்குடியில் இருந்து 11.25க்கு கிளம்பி மதியம் 12.50க்கு சென்னை வந்து சேரும். குறைந்தபட்ச கட்டணம் 1499 ரூபாயாக இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. சென்னையிலும் தூத்துக்குடியிலும் புதிய சர்வீசை அறிமுகப்படுத்தும்விதமாக நாளை கோலாகல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

No comments: