Dec 4, 2011

சீனா சுரங்கத்தில் அணு ஆயுதங்கள் :அச்சத்தில் அமெரிக்கா!


சீனாவானது பல ஆயிரம் மைல்கள் நீளமான சுரங்கத்தில் அணு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன்படி சீனா சுமார் 3000 வரையான அணு ஆயுதங்களை கொண்டிருப்பதாக அவ் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 3 வருட ஆராய்ச்சிக்குப் பின்னரே இத் தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

செயற்கைக்கோள்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட புகைப்படங்கள், இரகசிய ஆவணங்களை மொழிபெயர்த்துமே இம் முடிவினை வெளியிட்டுள்ளனர்.


ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியிலேயே இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இவ் எண்ணிக்கையானது ஆரம்பத்தில் கூறப்பட்டதனை விட பல மடங்கு அதிகமானதாகும்.

பழைய ஆராய்ச்சிகளில் சீனாவிடம் 80 - 400 வரையான ஏவுகணைகளே இருக்கலாம் என நம்பப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டு சீனாவின் சிசுஹான் மாகாணத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் அங்கு சுரங்கங்கள் இடிந்து வீழ்ந்தன.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தேகத்தினையடுத்தே இவ் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன.

அந்நாட்டின் விசேட படையொன்று இதற்கெனவே செயற்பட்டுவருவதாகவும் அவர்களே சுரங்கங்களில் ஆயுதங்களைப் பதுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலானது உலக நாடுகளைக் குறிப்பாக அமெரிக்காவை அதிரவைத்துள்ளது என்பது மட்டும் நிஜம்.

No comments: