பாகிஸ்தானில் அமெரிக்கர் ஒருவரை அல் கய்தா தீவிரவாதிகள் கடத்தி உள்ளனர். இதனால் பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அல் கய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கர்களை குறி வைத்து தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேட்டோ படை தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் சமீபத்தில் பலியானது சர்வதேச அளவில் சர்ச்சையை எழுப்பி உள்ளது. Ôஇன்னொரு முறை இதுபோல் தாக்குதல் நடந்தால், நேட்டோ படைகள் மீது பதிலுக்கு தாக்குதல் நடத்துவோம்Õ என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் லாகூரில் தங்கி பழங்குடியின மக்களுக்கு உதவி வந்த அமெரிக்கர் வாரன் வெயின்ஸ்டின் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காணவில்லை. அவரை கண்டுபிடிக்க பாகிஸ்தான் வீரர்களுடன் சேர்ந்து அமெரிக்க படைகளும் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் வாரனை கடத்தியது நாங்கள்தான் என்று அல் கய்தா தீவிரவாத தலைவர் அய்மன் அல் ஜவாகிரி இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். ÔÔபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா உள்பட பல நாடுகளில் முஸ்லிம்களை அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களை அமெரிக்கா விடுவித்தால் கடத்தப்பட்ட வாரனை விடுவிக்கிறோம். மேலும், பாகிஸ்தானில் உள்ள முகாம்களை அமெரிக்கா உடனடியாக காலி செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்று ஜவாகிரி நிபந்தனை விதித்துள்ளார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment