தி டர்ட்டி பிச்சர் என்ற திரைப்படத்தில் ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் Ôதி டர்ட்டி பிச்சர்Õ என்ற இந்தி திரைப்படம் கடும் விமர்சனத்துக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இதில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். இவர் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆசாத் என்ற வக்கீல் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். ‘டர்ட்டி பிச்சர்’ திரைப்பட போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாகவும்
, இளைஞர்களை சீரழிப்பதாக இருப்பதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘பெண்களை கீழ்த்தரமாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டம்&1986, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு நல்லகுன்டா போலீசாருக்கு உத்தரவிட்டார். டர்ட்டி பிக்சர் வெளியாவதற்கு முன்பு, இதற்கு தடை விதிக்கக் கோரி சில்க் ஸ்மிதாவின் சகோதரர் நாகா வரபிரசாத ராவ் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment