Facebook, google உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சில கருத்துகளுக்கு, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சில குறிப்பிட்ட சமுகத்தைச் சேர்ந்த மக்களை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்க, வலைத்தளங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், அதே நேரம், இந்த வலைத் தளங்களை தணிக்கை செய்யும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று அதிகார வட்டாரங்களை மேற்கோள் காட்டி றிஜிமி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரச்னை தொடர்பாக, இந்த வலைத் தளங்களின் பிரதிநிதிகள அரசுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிகிறது. ஆனால், இது போன்ற கருத்துகள் வெளியாவதை தடுப்பது, தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று வலைத் தளப் பிரதிநிதிகள் அரசிடம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment