Dec 1, 2011

யோகா கலை என்பது சாத்தானின் வேலை என்று வாடிகனின் தலைமை போதகர் ஒருவர் பேசியுள்ளார்.


பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகா கலை என்பது சாத்தானின் வேலை என்று வாடிகனின் தலைமை போதகர் ஒருவர் பேசியுள்ளார்.
உடல், உள்ளத்தை கட்டுக்கோப்புடன் ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகா கலை இந்தியாவில் பண்டைய காலத்தில் தோன்றியது. இக்கலை தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், இத்தாலியின் டெர்னி நகரில் சமீபத்தில் ஒரு மாநாடு நடத்தது. அதில் வாடிகனை சேர்ந்த தலைமை போதகரான கேபிரியல் அமோர்த் (85) என்பவர் பேசியதாவது:

ஹாரிபாட்டரில் வரும் சாத்தானின் வேலை போன்றது யோகா கலை. அது உடல் மற்றும் மூளையை கட்டுக்குள் கொண்டு வரும் சாத்தானின் மாய தந்திர வேலை. மேலும் அது மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட சமயம் சார்ந்தது என்று அவர் தெரிவித்தார். ‘யோகா கலை என்பது மதம் சம்பந்தமானது இல்லை. ஆனால், உடல், உள்ளத்தை சீராக்கும் அசாதாரண கலை. கேபிரியலின் கருத்து மிகவும் மோசமானது’ என்று இத்தாலியன் யோகா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments: