கச்சத்தீவு இந்திய மீனவர்களுக்கு சொந்தமானதல்ல என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கச்சதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இந்திய நாடாளுமன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மற்றும் மீன்பிடி வலைகளை காய வைத்துக் கொள்தற்காக மட்டுமே கச்சதீவை இந்திய மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கச்சத்தீவை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கவில்லை.
1974ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கச்சத்தீவு தொடர்பான உத்தியோகபூர்வ உரிமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளதாக அமைச்சர் கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளமையை ஜீ.எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜி எல் பீரிஸ் இந்த பதில்களை வழங்கினார்
No comments:
Post a Comment