Nov 30, 2011

இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. பொறுப்புடன் விளையாடிய ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். கட்டாக் பாரபட்டி ஸ்டேடியத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது.சிம்மன்ஸ் 19, பரத் 17, சாமுவேல்ஸ் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பிராவோ & ஹயாத் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. ஹயாத் 31 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். பொறுப்புடன் விளையாடிய பிராவோ அரைசதம் அடித்தார். பிராவோ 60 ரன் எடுத்து (74 பந்து, 6 பவுண்டரி) ரெய்னா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் போலார்டு 13, கேப்டன் சம்மி டக் அவுட், ராம்டின் 14 ரன் எடுத்து வெளியேறினர். ஓரளவு தாக்குப்பிடித்த ரஸ்ஸல் 22 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்தது. ரோச் 12, மார்ட்டின் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

           இந்திய பந்துவீச்சில் உமேஷ், ஆரோன் தலா 2, வினய் குமார், அஷ்வின், ஜடேஜா, ரெய்னா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து, 50 ஓவரில் 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோச், ரஸ்ஸல் வேகத்தில் ரன் எடுக்க முடியாமல் திணறிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுப்பு நடத்தினர். பார்திவ் 12, கம்பீர் 4, கோஹ்லி 3, கேப்டன் சேவக் 20, ரெய்னா 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். 
இந்தியா 11.2 ஓவரில் 59 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ரோகித் & ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடியது. பொறுப்புடன் விளையாடிய இருவரும் 83 ரன் சேர்த்தனர். ஜடேஜா 38, அஷ்வின் 6 ரன்னில் வெளியேறினர். ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார். பொறுப்புடன் ஆடிய ரோகித் 72 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். வினய் குமார் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 48.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து வென்றது. ஆரோன் 6 ரன், யாதவ் 6 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்

No comments: