Dec 2, 2011

புதிய அடையாள குறியுடன் ரூ.10, ரூ.1000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



உலகின் முன்னணி நாடுகளில் இருந்து வெளியாகும் கரன்சிகளில் பிரத்யேக அடையாள குறிகள் இடம் பெற்று இருப்பதை காணலாம். ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் வெளியிடப்படும் கரன்சிகளில் பிரத்யேக அடையாள குறி கிடையாது.


ரூபாய் என்பதை குறிக்கும் வகையில் ஆர்.எஸ்.என்று பண மதிப்புக்கு முன்னாடி போடப்படுகின்றன. அந்த குறையை போக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கிய பிரத்யேக அடையாள குறியை ரிசர்வ் வங்கி எற்றுக் கொண்டது.  

அந்த புதிய அடையாள குறி, நாணயங்களில் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கரன்சிகளில் இதுவரை பயன்படுத்தவில்லை. விரைவில் புதிய அடையாள குறியை தாங்கி ரூபாய் நோட்டுகள் வெளிவர உள்ளன. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.  

இதுபற்றி, ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய அடையாள குறியுடன் முதல் முதலில் ரூ.10, ரூ.1000 நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விழாக்கால சீஷனில் இந்த வகை நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. பழைய நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும். அடுத்த கட்டமாக அனைத்து மதிப்பிலான ரூபாய் நோட்டுகளிலும், புதிய அடையாள குறி பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: