மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, மதுரை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிய எம்பி அலுவலகம் கட்டி ஒதுக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்தால் இன்று மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த இடத்தை பறித்து மீண்டும் மேற்கு மண்டல அலுவலகத்திற்காக ஒப்படைக்க மாநகராட்சி கமிஷனர் நடராஜன், மேயர் ராஜன் செல்லப்பாவிடம் ஒப்படைத்தார். இதை இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் கடைசி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரம், எம்பி அலுவலகத்துக்கான ஒப்படைத்த இடத்தை ரத்து செய்த தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் கொண்டுவருவதை அறிந்த திமுகவினர் முன்கூட்டியே ஒட்டுமொத்தமாக மாநகராட்சி கூட்டத்தைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் உள்ளார். இந்த நேரத்தில் மதுரை உள்ள எம்பி அலுவலக இடம் பறிக்கப்பட்டச் செய்தி, மு.க.அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
இந்த செய்தி டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கவனத்துக்கு சென்றது. அவர் தற்போது பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால், மதுரை திரும்பிய பின்பு, தன் அலுவலகத்தை கைப்பற்ற நீதிமன்றம் செல்லப்போவதாக திமுக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கு மண்டலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிய கட்டிடத்தை கட்டி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அலுவலத்துக்கு பயன்படுத்துமாறு அன்றைய திமுக மேயர் தேன்மொழி ஒப்படைத்தார்.
மதுரையில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் அலுவலகத்தை, மதுரை மாநகராட்சி நிர்வாகம் பறித்துக்கொண்ட விவகாரம், அவரை எட்டியதும், அவசரம் அவசரமாக மதுரைக்கு இன்று மாலை திரும்புகிறார். மதுரை திரும்பியதும், தனது இல்லத்தில் வழக்கறிஞர்களோடு சட்ட ஆலோசனை நடத்திவிட்டு, வழக்கு தொடுப்பாரா அல்லது அறிக்கை மட்டும் கொடுப்பாரா என்பது அவர் வந்த பிறகுதான் தெரிய வரும். மத்திய அமைச்சரை வரவேற்க, அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

No comments:
Post a Comment