அதிரடிக்கு பெயர்போன மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனும், மாவட்ட எஸ்பி அஸ்ராகார்க்கும், மாவட்ட கலெக்டர் சகாயம் ஆகியோரின் பார்வை அரசியல்வாதிகள் பக்கம் மட்டுமே திரும்பியுள்ளதால், கூலிப்படைகளின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டே போகிறது.ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மதுரையில் கடந்த 3 மாதங்களில் பட்டப்பகலில் 9 படுகொலைகள் நடந்திருக்கின்றன. இன்று திருமங்கலம் இந்திரா நகரில் பட்டப்பகலில் பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள் தேவி கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.கடந்த 3 மாதங்களில் இதுபோன்ற பட்டப்பகல் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் படுகொலையாக பாமக முன்னாள் மாநில துணைச்செயலாளர் இளஞ்செழியன், அவரது வீட்டுக்கு முன்பு அதிகாலையில் கொல்லப்பட்டார். அதற்கு பழிக்குப் பழியாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரை வில்லாபுரம் பகுதியில் அம்பேத்கார், மகாகனி உள்பட இருவர் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் தபால் தந்தி நகரில் தனியாôக இருந்த சாந்தி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கடந்த மாதம் ஏலக்காய் வியாபாரி முருகேசன், பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த 25 லட்சம் ரூபாயையும் பறித்துச் சென்றது. இதுவரை இந்த கொலைகள் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. போலி குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆங்காங்கே ஆஜராகின்றனர்.இதற்கிடையே பாஜக மூத்த தலைவர் அத்வானி மதுரைக்கு யாத்திரை வந்திருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, சதியும் முறியடிக்கப்பட்டது. இதிலும் முக்கிய குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை 9 படுகொலைகள் பட்டப்பகலில் நடந்திருப்பது மதுரை மாநகரில் பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதற்கிடையே பல்வேறு வெளிநாட்டினர் வந்து செல்லும், கோவில் மாநகரில் பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், சுற்றுலாப்பயணிகளையும் அச்சப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment