
8-ந்தேதி திறக்கப்பட்ட உண்டியலில் 53 லட்சத்து 16 ஆயிரத்து 775 ரூபாயும், 29-ந்தேதி எண்ணப்பட்ட உண்டியலில் 44 லட்சத்து 15 ஆயிரத்து 127 ரூபாயும், மாதம் ஒருமுறை எண்ணப்படும் அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 926 ரூபாயும், கோசாலை உண்டியலில் 29 ஆயிரத்து 844 ரூபாயும் என மொத்தம் ஒரு கோடியே 3 லட்சத்து 45 ஆயிரத்து 672 ரூபாய் உண்டியல் வசூல் கிடைத்து உள்ளது.
நவம்பர் மாதம் எண்ணப்பட்ட உண்டியலில் காணிக்கையாக தங்கம் 923 கிராமும், வெள்ளி 5,020 கிராமும் கிடைத்து உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழா மற்றும் தற்போதைய அய்யப்ப பக்தர்கள் சீசன் ஆகியவற்றால் கோவிலில் உண்டியல் வசூல் ஒரு கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment