சென்னை ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் ராஜாசங்கர், வேணுகோபால் ரெட்டி, சுப்பாரெட்டி உள்ளிட்டோர் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், “ சென்னை சித்தரஞ்சன் சாலையில், எனது வீட்டிற்கு அருகிலுள்ள இடத்தை வாங்கிய முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், எனது வீட்டையும் வாங்குவதற்கு முயற்சி செய்து, அதற்காக சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் (ஸ்டாலின் நண்பர்), ஸ்ரீனிவாசன் ஆகியோர், என் வீட்டிற்கு வந்து, சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை, ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இல்லையென்றால், எனக்கு பல பிரச்சனைகள் வரும் என்று மிரட்டினர், அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், கடந்தாண்டு ஜூலை 16ம் தேதி புகார் செய்ய சென்றேன்.
என் மனுவை வாங்க மறுத்து விட்டனர். அதன் பின், பத்திர பதிவாளரை என் வீட்டிற்கு அழைத்து வந்து, வேணுகோபால் ரெட்டி பெயரில், என் வீட்டை கிரையம் செய்து கொண்டனர். தற்போது, இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில், 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு, ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார். எனவே, என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி, தன் பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், என் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இம்மனுவை விசாரித்த போலீசார், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment