Nov 25, 2011

ரூ.10 கோடி செலவில் தங்க கிறிஸ்துமஸ் மரத்தை தயாரித்துள்ள ஜப்பானிய நகைக்கடை அதிபர்!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டது. அலங்கார பொருட்கள் மற்றும் குடில்களை அமைப்பதற்கான பொருட்களை இப்போதே மக்கள் வாங்க தொடங்கி விட்டனர்.பல்வேறு நகரங்களில் வண்ணமிகு அழகிய கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தங்க கிறிஸ்துமஸ் மரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

2.4 மீட்டர் உயரத்தினால் ஆன இந்த கிறிஸ்துமஸ் மரம் டோக்கியோவில் ஜின்ஷா தனாகா என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் வைக்கப்பட்டுள்ளது.சுமார் 12 கிலோ தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த மரத்தின் மதிப்பு ரூ.10 கோடி(இந்திய ரூபாய்) ஆகும். இந்த மரத்தை 15 தங்க நகை நிபுணர்கள் 4 1/2 மாதங்கள் இரவு பகலாக சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.

2 comments:

stalin wesley said...

பதிவு அருமை தமிழா ........

பகிர்வுக்கு நன்றி

MaduraiGovindaraj said...

நன்றி stalin wesley